மட்டக்களப்பு கெம்பஸில், தொழில்நுட்ப கற்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

🕔 August 3, 2018
ட்டக்களப்பு கெம்பஸ் – இல் தொழில்நுட்பக் கற்கை நெறிகளை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான குமார சிறிசேனவுடன் நேற்று வியாழக்கிழமை கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமார சிறிசேன , மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு கெம்பஸுக்கு நேற்று விஜயம் செய்த டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமார சிறிசேனஅங்குள்ள நவீன வசதிகள், தொழில்நுட்பக் கூடங்களை பார்வையிட்டார். பின்னர், டெலிகொம் நிறுவனத்துக்கும் – மட்டக்களப்பு கெம்பஸுக்கும் இடையில் புரிந்துணர்வுடன் தகவல் தொடர்பு உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பல்கலைக்கழகமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு கெம்பஸுடன் இணைந்து செயற்பட இதன்போது டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்