தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி: அபிப்பிராயம் கோரியுள்ளார் சபாநாயகர்

🕔 August 2, 2018

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குவது தொடர்பில்,  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை சபாநாயகர் கோரியுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் பதவியை தினேஸ் குணவர்த்தனவுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்து, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 08 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்று, கடந்த மாதம் 30 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

தினேஷ் குணவர்த்தன ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்துள்ள போதிலும், அடிப்படையில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

எனவே, தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது தொடர்பில் அபிப்பிராயம் கேட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீரவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்