பல்கலைக்கழக மாணவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது: உயர் கல்வியமைச்சர் குற்றச்சாட்டு

🕔 July 31, 2018

போராட்டம் நடத்துவதற்காக பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல மில்லியன் ரூபா பணம் வழங்கப்படுவதாக, உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“நாட்டில் அரசியல் குழப்ப நிலைமைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற தங்களது அபிலாசையை பூர்த்தி செய்து கொள்ள, சில சக்திகள் மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றது.

போராட்டம் நடத்துவதற்காக மாணவர்களுக்கு பல மில்லியன் ரூபா பணம் வழங்கப்படுகின்றது. போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மாணவர்களில்லை.

அநேகமான போராட்டங்கள் தூய்மையான நோக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக அரசியல் நோக்கங்களுக்கானது” என்றார்.

இதேவேளை, மாணவர்களுக்கு அரசியல் சக்திகள் பணம் வழங்குகின்றன என்பதனை, முடிந்தால் ஆதாரத்துடன் உயர்கல்வி அமைச்சர் நிரூபித்துக் காண்பிக்கட்டும் என்று, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர சவால் விடுத்துள்ளார்.

மாணவர்கள் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு எந்தவொரு அரசியல் சக்தியும் பணம் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்