மாகாண சபைத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும், மூன்று சதிகாரர்கள்: ஜி.எல். பீரிஸ் அம்பலப்படுத்தினார்

🕔 July 30, 2018

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் காலங்கடுத்தும் சதித்திட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் ஆகியோரே ஈடுப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனைக் கூறுவதற்கு தான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலங்கடுத்துவதை தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துவரும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உயர் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்