பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் அஸ்தி, திரைப்பட இயக்குநர் சீமானின் வீட்டில்; பரபரப்புத் தகவல்

🕔 September 6, 2015

Seeman - 011
வி
டுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் வே. பிரபாகரனுடைய தாயாரின் அஸ்தி அடங்கிய (உடல் எரிக்கப்பட்ட சாம்பல்) மண் பானையொன்று, இந்தியாவின் தமிழகத் திரைப்பட இயக்குநரும், ‘நாம் தமிழர்’ அமைப்பின் தலைவருமான சீமானின் வீட்டிலுள்ள பூசையறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆங்கில ஊடகமொன்றுக்கு சீமான் வழங்கிய பேட்டியொன்றிலேயே இதனைக் கூறியுள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் தயாரான பார்வதியம்மாள் 2011 ஆம் ஆண்டு, தனது 81 ஆவது வயதில் – வல்வெட்டித்துறையில் மரணமடைந்தார்.

பார்வதியம்மாளின் இறுதிக் காலங்களில், அவரை – தற்போதைய வட மாகாணசபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் பராமரித்து வந்தார். இவர், பிரபாகரனின் உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்த பார்வதியம்மாளின் உடல், வல்வெட்டித்துறையிலேயே தகனம் செய்யப்பட்டது.

இவ்வாறாதொரு நிலையில், பார்வதியம்மாளின் அஸ்தி அடங்கிய மண் பானையொன்று, தனது தமிழக இல்லத்தில் உள்ளதாக சீமான் கூறியுள்ளார்.

இதேவேளை, சீமானின் வீட்டிலுள்ள பூசையறையில் மேலும் இரண்டு மண் பானைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பானைகளில் ஒன்றில், புலிகளின் தலைவர் பிரபாகரனின் கோட்டையாக விளங்கிய வன்னிப் பிரதேசத்து மண்ணும், மற்றைய பானையில் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போருக்கு எதிராக, தீக்குளித்து மரணமான ஊடகவியலாளர் ஒருவரின் சாம்பல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீமானின் வீட்டில், புலிகளின் மறைந்த தலைவர் பிரபாகரனின் பல்வேறு விதமான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்