ஐ.தே.கட்சியின் ஆண்டு விழாவில், பிரதம அதிதியாக ஜனாதிபதி பங்கேற்பு

🕔 September 6, 2015

UNP - 01
– அஷ்ரப் ஏ. சமத் –

க்கிய தேசியக் கட்சியின் 69ஆவது ஆண்டு விழாவில், பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  கலந்துகொண்டார்.

இவ்வாறானதொரு ஆண்டு விழாவில், ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவராகப் பதவி வகிக்கும் ஜனாதிபதியொருவர் கலந்து கொண்டமையானது, இதுவே – முதல் தடவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமான, அக் கட்சியின் 69 ஆவது ஆண்டு விழாவில் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா, அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன் மற்றும் அதுரலியே ரதன தேரர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ் விழாவில், கட்சியின் தலைவரும், பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க, செயலாளா் அமைச்சா் கபீா் ஹாசீம், ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச மற்றும் பிரதம அதியாகக் கலந்து கொண்ட – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.

1946ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தலைவராக டி.எஸ்.சேனாநாயக்க பதவி வகித்தார். இவரின் பின்னர், கட்சியின் தலைமைப் பொறுப்பை அவரது மகனான டட்லி சேனாநாயக்க பொறுப்பேற்றார்.

டட்லி சேனாநாயக்கவுக்குப் பின்னர் ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பு, ஜே.ஆர்.ஜயவர்தன வசம் சென்றது. அவருக்குப் பின்னர் ரணசிங்க பிரேமதாச, தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

1994ஆம் ஆண்டு முதல் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமைப் பொறுப்பை வகித்து வருகின்றார்.UNP - 04UNP - 02UNP - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்