பெண்கள் பெற்றுக் கொண்ட நுண்கடனில், 01 லட்சம் ரூபாவினை ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் முடிவு

🕔 July 24, 2018

பெண்களுக்கு நுண் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன் தொகையில் 01 லட்சம் ரூபாய் வரையான பகுதியை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான யோசனை நிதி அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்திருந்தார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கே இந்த விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகல், புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய 12 மாவட்டங்கள் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்