சிரேஷ்ட பத்திரிகையாளர் சுஐப் எம். காசிம் எழுதிய, நூல் அறிமுக விழா

🕔 July 19, 2018

– அஸீம் கிலாப்தீன் –

சிரேஷ்ட பத்திரிகையாளர் சுஐப் எம் . காசிம் எழுதிய  ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ என்ற நூலின்  அறிமுக விழா, எதிர்வரும் திங்கட் கிழமை 23 ம் திகதி மாலை 4.00 மணிக்கு அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள ரி.எப்.சி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது .

அஷ்ஷெய்க் எஸ் .எல்.எம்.ஹனிபா மதனி தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், மீன்பிடித்துறை ,கடல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி – பிரதம அதிதியாக கலந்து கொள்கின்றார்.

கெளரவ அதிதிகளாக வேதாந்தி சேகு இஸ்ஸதீன் , முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி ஹசன் அலி , நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப் , ஏ.எல் .எம். நசீர், கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிரபைட் நிறுவன தலைவருமான எம்.ஏ. அப்துல் மஜீத் , முன்னாள் மாகாணஅமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம். அப்துல் ஜவாத் மற்றும் எம்.ஏ .எம் . அமீர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. தாஹிர் , அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்  எச் .எம். அப்துல் லத்தீப், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு பிரதி தலைவர் நசார் ஹாஜி , மாகாண சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளர் ஏ.எல். பரீத் , நீர்வழங்கல்  சபை பிராந்திய முகாமையாளர் ஜே. அப்துல் கரீம் ,  இறக்காமம் பிரதேச சபை உபதவிசாளர் ஏ.எல். நெளபர்  நளீமி , அசோக் லேலன்ட் நிறுவனத்தின் தலைவரும்  முன்னாள் மாநகர சபை மேயருமான  கலாநிதி  சிராஸ் மீராசாஹிப், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும்  நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளருமான அன்ஸில் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கேற்கின்றனர் .

நூலின் முதற் பிரதியை தொழில் அதிபர் எம்.ஜே.எம். ஜெரின் பெற்றுக்கொள்கின்றார்.

அறிமுக உரையை கவிஞர் ரி.எல். ஜெளபர்கானும், வாழ்த்துரையை கவிஞர் கால்தீனும், நன்றியுரையை ஜுனைதீன் மான்குட்டியும் நிகழ்ச்சி தொகுப்பை  பிறை எப்.எம் கட்டுப்பாட்டாளர்  பஷீர் அப்துல் கையூமும் நிகழ்த்துகின்றனர்.

இந்த நிகழ்வில் மூத்த உலமாக்கள், கல்விமான்கள், வர்த்தக பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊடக வியலாளர்களும் பங்கேற்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்