பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஹிஸ்புல்லாவின் பொதுக்கூட்டம்

🕔 September 6, 2015
Hisbullah - 004
பழுலுல்லாஹ் பர்ஹான் –

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கலந்து கொண்ட பொதுக் கூட்டமும் பொதுக் கூட்டமொன்று, நேற்று சனிக்கிழமை இரவு – காத்தான்குடி ‘குர்ஆன்’ சதுக்கத்தில் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்டையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், ஐ.ம.சு.முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஹிஸ்புல்லாஹ்வை – வரவேற்று, அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக – இது அமைந்திருந்தது.

காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இப் பொதுக் கூட்டத்தில், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் பின்னர், தற்போதய அரசியல் சூழ்நிலை குறித்து உரை நிகழ்த்தினார்.

இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் ஜெஸீம், நகரசபை  உறுப்பினர்களான சல்மா அமீர் ஹம்சா, அலி சப்ரி , முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் மற்றும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் றஊப் ஏ. மஜீட் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேற்படி கூட்டம் நடைபெற்ற போது – பொலிசாரும், விஷேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டபோது, அந்தச் செய்தியினைக் கொண்டாடிய ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்களால், மாற்றுக் கட்சிக்காரர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படதும், அவர்களில் 13 பேர் வைத்தியசாலைகயில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
Hisbullah - 002Hisbullah - 003

Comments

புதிது பேஸ்புக் பக்கம்