பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாக்க, உலக புலமைசார் சொத்துக்கள் அமைப்புடன் இணைந்து நடவடிக்கை: அமைச்சர் றிசாட்

🕔 July 13, 2018

லங்கையின் பாரம்பரிய சுதேச மருத்துவ முறையை பாதுகாப்பதற்கு ஜெனீவாவின் பாரம்பரிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஜெனீவா உலக புலமைசார் சொத்துக்கள் அமைப்புடன் இணைந்து, புலமைசார் சொத்துக்களின் உதவியுடன் எமது நாட்டின் பாரம்பரிய மற்றும் சுதேச மருத்துவ முறையை அறிமுகம் செய்வதற்காக கடந்த 05வருடங்களாக வேலைத்திட்டங்களை மேற்கொள்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

இன்று வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய வர்த்தக சம்மேளனத்தின் ஆயுர்வேத எக்ஸ்போ –  2018  கண்காட்சியில் விஷேட விருத்தினர்களில் ஒருவராக கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இதனைத் தெரிவித்தார்

அமைச்சர் ராஜீத சேனாரட்ண பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் தயாகமகே – அதிதிகளில் ஒருவராக பங்கேற்றியிருந்தார்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு மேலும் உரையாற்றும் போது;

“ஆயுர்வேத வைத்தியத்துறை இலங்கையின் நீண்டகால பாரம்பரிய வைத்தியமாக இருப்பதுபோன்று, சுதேச மருத்துவமுறையும் நமது நாட்டின் நீண்டகால மருத்துவ முறையாக திகழ்கின்றது. அத்துடன் சுதேச மருத்துவ துறையானது, ஆரோக்கியமான மற்றும் மருத்துவ சுற்றுலா அபிவிருத்தி துறையாக விளங்குகின்றது.

ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவ முறைகள் ஒன்றுக்கொன்று பிணைந்த வைத்திய முறைகளாக இருக்கின்றது. இலங்கையின் சுதேச பாரம்பரிய வைத்திய முறைகளை போன்று ஆயுர்வேத வைத்திய முறையும் இலங்கையின் சொந்த வைத்திய முறைகளாக சிலவேளைகளில் கருதப்படுகின்றது.

எனினும், உள்நாட்டு பாரம்பரிய வைத்தியமுறைக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியமாகின்றது. இந்த பாரம்பரியத்தை பேணுவதற்காகவே இலங்கையின் புலமைசார் சொத்து முறையை பிரயோகித்து இதனை பாதுகாப்பதுடன், புலமைசார் சொத்து முறையை விரிவாக்கம் செய்வதற்கு ஈடாக பாரம்பரிய வைத்தியமுறைகளையும் நவீனதேவைகளுக்கேற்ப, விருத்தி செய்யவேண்டியுள்ளது

இதனாலேயே ஜெனீவாவின் சர்வதேச புலமைசார் சொத்துக்களின் துணையுடனும், பூகோள ரீதியான பாரம்பரிய அறிவை பெற்றும்  உள்நாட்டு வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்திவருகின்றோம்.

இந்த முயற்சியின் மூலம் எமது பெறுமதியான இலங்கையின் சுதேச மருத்துவ துறையை பிறநாடுகளிடமிருந்தும், போட்டியாளர்களிடமிருந்தும் பாதுகாக்கலாம் என நம்புகின்றோம். அத்துடன் இந்த அரசாங்கம் ஆரோக்கியமான, உல்லாச மருத்துவ இலக்கை அடையமுடியும் என திடமாக நம்புகின்றோம்” என்றார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments