மரண தண்டனை விதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர், சிறைச்சாலைகளில் உள்ளனர்

🕔 July 13, 2018

லங்கை சிறைச்சாலைகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட 300க்கும் மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர். இவர்களில் சிலர் – போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களாவர்.

இந்த நிலையில், மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான விசேட அறிக்கையொன்றினை, ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு சிறைச்சாலைத் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

இதேவேளை, மரண தண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடும் அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை, சிறைச்சாலைத் திணைக்களம் கோரவுள்ளதாக, அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பிலுள்ள பிரதான சிறைச்சாலையான வெலிக்கடை சிறைச்சாலையில், மரண தண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடுவதற்கான கட்டமைப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments