கண்டி கலவரத்தின் சந்தேக நபர், அமித் வீரசிங்க உண்ணா விரதம்

🕔 July 12, 2018

ண்டி – திகனயில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதலில் ஈடுபட்டார் எனும் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள, மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க, உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்குமாறு கோரி, இவர் நேற்று புதன்கிழமை முதல் இவ்வாறு ​போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு இனவாத நடவடிக்கையில் இவர் ஈடுபட்டமையை நிரூபிக்கும் வகையிலான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இன்னும் காண முடியும்.

Comments