பெண் பொலிஸை கடித்தார் கிராம சேவை உத்தியோகத்தர்: கைது செய்யப் போன இடத்தில் சம்பவம்

🕔 July 11, 2018

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கையை, பெண் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் கடித்துக் காயப்படுத்திய சம்பவமொன்று ரக்வான பிரதேசத்தில் இடம்பெற்றது.

குறித்த கிராம சேவை உத்தியோகத்தரை, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்வதற்கு முயன்றபோதே, இவ்வாறு கடித்துக் காயப்படுத்தினார்.

காயப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, குறித்த கிராம சேவை உத்தியோகத்தரைக் கைது செய்வதற்கு, ரக்வான பொலிஸ் நிலையத்திலிருந்து வருகை தந்திருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரே, இவ்வாறு கடி காயத்துக்கு உள்ளானார்.

Comments