விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்

🕔 July 10, 2018

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் – புலிகள் அமைப்புக் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பில், விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் மா அதிபரை – சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 02ஆம் திகதி நடைபெற்ற அரச நிகழ்வொன்றில் பங்கேற்றபோது உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன்; தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புலிகளின் கரங்கள் ஓங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து விஜயகலா அங்கத்துவம் வகிக்கும் ஐ.தே.கட்சி உள்ளிட்ட பல கட்சிகள், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

இந்த நிலையில், விஜயகலா இவ்வாறு பேசியமையானது அரசியலமைப்பை மீறியிருந்ததா, அல்லது சட்டத்துக்கு முரணாக இருந்ததா என்று விசாரிக்குமாறு, சட்டமா அதிபரை சபாநாயகர் கோரியிருந்தார்.

Comments