பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை நெரித்து கொலை செய்த தேரர்: விசாரிக்க சென்ற இடத்தில் கொடூரம்

🕔 July 10, 2018

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவின் கழுத்தை நெரித்து, பௌத்த தேரர் ஒருவர் கொலை செய்துள்ளார்.

இரத்தினபுரி – கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, விகாரையின் தேரரொருவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார்.

தேரரால் கழுத்து நெரிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இடை வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தின் போது , இரத்தினபுரி பொலிஸ் நிலைய நிலையத்தின் பொலிஸ் பரிசோதகரும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது , பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குறித்த தேரர் கைக்குண்டொன்றை எடுத்து வந்ததாகவும், தேரரைத் தாக்கி கைது செய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

Comments