கோட்டாவுக்கு எதிராக குமார வெல்கம போர்க் கொடி; ஒன்றிணைந்த எதிரணிக்குள் குழப்பம்

🕔 July 10, 2018

நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்படுபவர் குறைந்தபட்சம் பிரதேசசபைத் தலைவராகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

எமது ஜனாதிபதி வேட்பாளர்  இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, மக்களின் துன்பங்களை அவரால் புரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நாட்டின் சுதந்திரம், ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு, நாட்டு மக்களுக்கு வாழ்வதற்கான உரிமையும் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க உள்ளதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த அணியில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதை, தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாணவும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்