அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதார உதவிகள்: அமைச்சர் றிசாட் வழங்கி வைப்பு

🕔 July 9, 2018

ம்பாறை மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன், அந்த மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்குச் சென்று சுயதொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.

பொத்துவில், நிந்தவூர், ஆகிய பிரதேசங்களில் பிரமாண்டமான முறையில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

மாவடிப்பள்ளிக்கு சென்ற அமைச்சர் அங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.

அதன்பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு சம்மாந்துறையில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதன் பின் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலத்திலும் அமைச்சர் பங்கு கொண்டார்.

அமைச்சர் பங்கேற்ற இந்த நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, முஸ்லிம் சமாதானக் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி. ஹசனலி, செயலாளர் எஸ். சுபைதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ருப், எஸ்.எம்.எம். இஸ்மாயில், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. தாஹிர், சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம். நௌசாட், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச். முஜாஹிர், முசலி பிரதேச சபைத் தவிசாளர் கே. சுபியான், நிந்தவூர் பிரதேச சபை பிரதித் தவிசாளர் சுலைமான் லெப்பை, முசலி பிரதேச சபை பிரதித் தவிசாளர் எம். றைசுதீன்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொத்துவில் மஜீட், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத், எஸ்.எல்.எம்.  ஹனீபா மதனி, சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், ஏ.ஆர்,எம்.ஜிப்ரி, மாநகர சபை உறுப்பினர் முபீத் உட்பட கட்சியின் நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்