மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை

🕔 July 8, 2018

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றிலுள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்தக் கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இந்தக் கோரிக்கையினை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எழுத்து மூலம் விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்