ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்துக்கு, அமைச்சர் ஹிஸ்புல்லா உதவி

🕔 July 8, 2018
றாவூரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும், அதற்கான காரியாலய மின் உபகரணங்களை வழங்கி வைத்ததோடு தனது பூரன ஒத்துழைப்புக்களை இந்நிலையத்திற்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

ஏறாவூர், சவுக்கடி கடற்கரை வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கிழக்கு மாகாண புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்துக்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்ட ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அங்கு நிலையத்தின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.

ஏற்கனவே, புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கும் போது, நிதிப் பங்களிப்பு செய்திருந்த ராஜாங்க அமைச்சர், தான் தொடர்ந்தும் இப்பணிக்கு உதவி செய்வதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.

அதற்கமைய நேற்றைய தினம் கட்டுமானப் பணிகளை ஆராய நேரடியாக சென்ற அவர், 20 மின்விசிறிகளை நிலையத்தின் கோரிக்கைக்கு அமைய தனது சொந்த நிதியிலிருந்து பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தனது சொந்த நிதியிலிருந்து 50ஆயிரம் ரூபாய் இந்நிலையத்திற்கு வழங்குவதாகவும், தான் மரணித்தாலும் தொடர்ந்தும் அந்நிதி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை, புற்றுநோய் பராமரிப்பு நிலைய விடுதிக்கான குளியலறை வசதிகளையும் தான் முழுமையாக செய்து தருவதாகவும் இதன்போது அவர் உறுதியளித்தமைக் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்