கோட்டாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: திஸ்ஸ விதாரண தெரிவிப்பு

🕔 July 7, 2018

கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதை, தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாண தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

“2020 ஆம் ஆண்டில் நடைபெறவுளள ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்துவதை, இடசாரி கட்சி என்ற வகையில் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் கடந்த வாரம் இடம்பெற்றபோது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.

எனினும் இவ்விடயம் குறித்து ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள கட்சிகளுக்குள் முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுக்கின்றன.  பஷில் ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்தும்படி சிலர் பரிந்துரைத்துள்ளனர். இன்னும் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை நிறுத்துமாறும் கூறுகின்றனர். எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலுக்கு சுமார் ஒன்றரை வருடங்கள் இருக்கின்றன.

எனவே இது குறித்து அடுத்த கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்