புத்தளத்தில் அபிருத்தி திட்டங்களை அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்தார்

🕔 July 7, 2018
புத்தளம் மாவட்டத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ், காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட சோனகர் தெரு, சங்குத்தட்டான் சிறு நகர வீதிகள் ஆகியவற்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்றுசனிக்கிழமை பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

அத்துடன், மங்கள எளிய, முந்தளம் மற்றும் கொத்தாந்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்துவைத்தார். தலா 2.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மூலம் சுமார் 1000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.

புத்தளம் மாவட்ட நிலத்தடி நீரில் அதிக உவர்தன்மை காணப்படுவதால், சிறுநீரக நோய் ஏற்பட சந்தர்ப்பமுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறான குடிநீர் சுத்திகரிப்பு திட்டங்களின் மூலம் இனம்காணப்படாத சிறுநீரக நோய் ஏற்படுவது மட்டுப்படுத்தப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

இந்நிகழ்வில், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சீ.எம். நபீல், கட்சியின் உயர்பீட உறுப்பினர் பைரூஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்