ராஜிநாமா செய்தார் விஜயகலா; உறுதிப்படுத்தினார் ஹரீன் பெனாண்டோ

🕔 July 5, 2018

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, ஐ.தே.கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம், தனது ராஜிநாமா கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன்  கையளித்துள்ளதாகவும் அமைச்சர் ஹரீன் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்