பிரேசில் நாட்டவர்களின் வயிற்றினுள் இருந்து, 163 கொகெய்ன் மாத்திரைகள் மீட்பு

🕔 July 2, 2018

ட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட,  பிரேசில் நாட்டைச் சேர்ந்த இருவரிடமும் இருந்து, இதுவரை 163 கொகெய்னின் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட மாத்திரைகளின் நிறை 960 கிராம் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரும் மேற்படி மாத்திரைகளை விழுங்கிய நிலையில் – கடத்த முயற்சித்த போதே கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்கள் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, வயிற்றினுள் இருந்த மாத்திரைகள் வெளியில் எடுக்கப்பட்டன.

இவற்றின் பெறுமதி சுமார்  04 கோடியே 85 லட்சம் ரூபாவுக்கும் அதிகம் என்று, பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

30 மற்றும் 24 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவரிடமிருந்து 91 கொக்கெய்ன் மாத்திரைகளும் மற்றையவரிடமிருந்து 72 கொக்கெய்ன் மாத்திரைகளும் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி இருவரும் நேற்றும் நேற்று முன்தினமும் தோஹாவிலிருந்து இலங்கை வந்த போதே, கைது செய்யப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்