மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்கா வழங்கிய பணம் குறித்தும் விசாரிக்க வேண்டும்: ஜோன்ஸ்டன்

🕔 July 1, 2018

கிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் கடந்த முறை தோற்கடிப்பதற்காக, அமெரிக்காவின் ஒபாமாஅரசாங்கம் வழங்கிய 678 மில்லியன் டொலர் தொடர்பாக முதலில் விசாரணைசெய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார்.

குருநாகல் மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இதக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“மஹிந்த ராஜபக்ஷவுக்கு 06 மில்லியன் டொலரினை சீனா வழங்கியதாக தற்போது கூறும் இவர்கள்தான், அன்று 18 பில்லியன் ரூபாய்களை பெற்றதாக கூறினார்கள். அந்த பணத்தை கண்ணால் கண்டதாக ராஜித சேனாரத்ன அப்பட்டமாக பொய் கூறியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க ஒபாமாஅரசாங்கம் வழங்கியதாக அமெரிக்க ராஜாங்க செயலாளார் ஜோன் கேரி கூறிய 678 மில்லியன் டொலர் தொடர்பில் முதலில் விசாரணைசெய்யவேண்டும்.

மகிந்த அரசாங்கத்தை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் பணம் வழங்கியமை பற்றியதெல்லாம் இவர்களுக்கொரு செய்தியல்ல. நிவ்யோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள இந்த அடிப்படை உண்மையற்ற செய்தியே இவர்களுக்கு செய்தியாகும்” என்றார்.

Comments