உள்ளுர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை, வர்த்தகக் கண்காட்சிகள் போக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

🕔 June 29, 2018

நிர்மாணத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை போக்குவதற்கு வர்த்தக கண்காட்சிகளும், காட்சிப்படுத்துல்களும் பெரிதும் துணை புரியும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 07வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிர்மாண கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனைக் கூறினார்.

மூன்று நாட்கள் இடம்பெறும் இந்த கண்காட்சியில் கட்டடம், நிர்மாணம், பொறியியல் மற்றும் கட்டகக்கலை தொழில்துறைகளில் உள்நாடு மற்றும் சர்வதேச வழங்குநர்கள் மற்றும் சேவை வழங்கல் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

சீனா, இந்தியா ஆகிய நாடுகளும் உள்நாட்டின் 200 நிறுவனங்களும்  இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

“நிர்மாண தொழில் துறையில் ஈடுபட்டுள்ள அல்லது தொடர்புபட்ட அனைவரும் இக் கண்காட்சியில் பங்கேற்பதால் குடியிருப்பு நிர்மாணிப்புக்கள் அல்லது எதிர்காலத்தில் தமக்கென சொந்த ஆதனத்தை உரிமைக்யாக விரும்புகின்ற எவருக்கும் இந்த பிரமாண்டமான வர்த்தக கண்காட்சியானது மிக சிறந்த வாய்ப்பாக அமையும்.

நிதி உதவி, நிர்மாணம் மற்றும் உட்புற அலங்காரம் என்பவற்றினூடாக, குடியிருப்பு நிர்மாணிப்பாளர்கள் வீட்டை நிர்மாணிப்பதற்கான வழிமுறைகளை வழங்குவதே இந்த கண்காட்சியின் நோக்கமாக இருப்பதால், இது இலங்கையின் நிர்மாணத்துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

இலங்கை நிர்மாணிப்பாளர்கள் கற்கை நிலையத்துடன் இணைந்து, ‘லங்கா எக்ஸிபிஸன் அண்ட் கென்பிரன்ஸ் சேர்விஸஸ்’ தனியார் நிறுவனம் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. தொழில்துறையில் எதிர்கால அபிவிவிருத்திக்கான தள மேடையாக இந்த கண்காட்சி அமையும்.

இலங்கையின் உள்ளூர் நிர்மாணத்துறையானது இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் 05 சதவீதத்தினால் சரிவடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நமது பொருளாதரத்தில் முக்கிய துறையான இந்த துறையை இன்னும் வலுப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

நமது நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 7.4% பங்களிப்பை நிர்மாணத்துறை வழங்குகின்றது. விவசாயத்துறையை காட்டிலும் இது அதிகளவானது. 2017ஆம் ஆண்டு 6.6% வளர்ச்சியில் இருந்த நிர்மாணத்துறை , இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு தாக்கத்தினால் தளர்வடைந்தது.

இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிர்மாண எக்போ 2018 கண்காட்சியானது, இந்த துறையை முன்னேற்றுவதற்கு உதவுமென நான் மீண்டும் நம்பிக்கை தெரிவிக்கின்றேன். இந்த நிர்மாண கண்காட்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்