அமெரிக்க – சீன வர்த்தக மோதலின் விளைவு: இலங்கைக்கு சலுகை

🕔 June 27, 2018

லங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் விலங்கு உணவுக்கான தீர்வையை சீனா ரத்துத் செய்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட 05 நாடுகளுக்கு, இந்தச் சலுகையினை சீனா வழங்கியுள்ளது.

அமெரிக்காவுடன் சீனாவுக்கு ஏற்பட்டுள்ள வர்த்தக மோதலைத் தொடர்ந்து, மாற்று வர்த்தக வழிகளை சீனா நாடுவதாக சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷ், இந்தியா, லாவோஸ், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய 05 நாடுகளிலிருந்து பெறப்படும் விலங்கு உணவுக்களுக்கு இவ்வாறு தீர்வை ரத்தாகியுள்ளது

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த சலுகை அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments