சந்தியா எக்னலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

🕔 June 26, 2018

னக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, காணாமல் போன ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொடவின் மனைவி – சந்தியா எக்னலிகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும், தன்னை அவமானப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகள் இடப்படுவதாகவும், தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமையினை அடுத்தே, இவ்வாறு தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், தன்னைப் பற்றி அசிங்கமாக எழுதுவதாகவும் அந்த முறைப்பாட்டில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தியா எக்னலிகொடவை ஹோமகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்திய குற்றத்துக்காக, ஞானசார தேரருக்கு ஆறு மாதங்களைக் கொண்ட இரட்டை கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆயினும், அந்த தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்தமையினை அடுத்து, தற்போது ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்