‘ஈத் மேளா’ எனும் பெயரில், கசினோ விடுதி நடத்தும், காமக் களியாட்ட நிகழ்வு: முஸ்லிம் அரசியல்வாதிகள் எங்கே?

🕔 June 24, 2018

பெல்லாஜியோ என்ற பெயரில் கொழும்பு மத்தியில் இயங்கும் ‘கசினோ’ சூதாட்ட விடுதி ஒன்று, நோன்புப் பெருநாள் சிறப்பம்சமாக எனத் தெரிவித்து, ‘ஈத் மேளா’ என்கிற பெயரில், காமக் களியாட்ட நிகழ்வொன்றினை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு, அதற்கான விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது.

சூதாட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமன்றி, எல்லா மதத்தினருக்கும்  ‘ஹராம்’ (தடுக்கப்பட்டது) என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறாயினும் தற்போது நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடத்தும் இந்த நிறுவனம், நாளை ‘சில்க் சிவராத்திரி’, ‘வெரைட்டி வெசாக்’ என்கிற பெயர்களிலும் களியாட்டங்களை நடத்தக் கூடும்.

இந்த நிலையில், மேற்படி சூதாட்ட விடுதியின் ‘ஈத் மேளா’ குறித்து முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் கல்விமான்கள் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக சொல்வார்களா என்கிற கேள்வி உள்ளது.

பெல்லாஜியோ சூதாட்ட விடுதியானது, தனது தொழிலை செய்வதற்காக, இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களின் நோன்புப் பெருநாளையும் கொச்சைப்படுத்தும் வகையில், இவ்வாறு நடந்து கொள்வது கண்டனத்துக்குரியதாகும்.

ஆகக்குறைந்தது, ‘முஸ்லிம்’ என்கிற அடையாளத்தை வைத்துக் கொண்டு, அரசியல் மேற்கொள்ளும் கட்சிகளாவது, இந்த விடயத்தில் தமது எதிர்ப்பினைப் பதிவு செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

(நன்றி: சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்