இ.போ.சபை பேரூந்துகளில், மிகுதிப் பணம் வழங்காத நடத்துநர்கள்; கேட்டால், சண்டை

🕔 June 22, 2018
ம்பாறை –  கல்முனை பாதை வழியாகப் பயணிக்கும் இ.போ.சபைக்குச் சொந்தமான வெளிமாவட்ட பேருந்துகள் சிலவற்றில் மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை என, பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கல்முனையிலிருந்து அம்பாறை பகுதிகளில் இறங்கும் பயணிகள் மற்றும் அம்பாறை பகுதிகளிலிருந்து கல்முனைக்கு  செல்லும் பயணிகளுக்கே மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை என்று பயணிகள் கூறுகின்றனர்.

கல்முனையிலிருந்து – அம்பாறைக்கு  பயணிப்பதற்கு 62 ரூபாவே தற்போது  பயணச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும்  பயணிகளிடம் 70  ரூபா நடத்துனரால் வலுக்கட்டாயமாக  வாங்கப்படுகிறது. மிகுதிப்பணம் பிறகு தருவதாக டிக்கட் பின்புறமாக எழுதப்படுகின்ற போதிலும், பின்னர் அது மறக்கடிக்கப்படுகிறது. மிகுதியை கேட்டவர்களுக்கு ஏச்சுக்கள்தான் பதிலாகவும் கிடைக்கின்றது.

சில வேளைகளில் 65  ரூபாவும் வாங்கப்பட்டு மிகுதிப் பணம் கொடுக்கப்படுவதில்லை  என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் மகளும் தாயும் கல்முனையில் இருந்து அம்பாறைக்கு செல்லும் போது, பஸ் நடத்துநர் இருவருக்கு டிக்கட் காசு  ரூபா 130 பெற்றுவிட்டு, மிகுதி 06 ரூபாயை வழங்காமல் விட்டதுடன் மிகுதியை கேட்டதற்காக சண்டையும் பிடித்துள்ளார்.

இதன்போது, இப்பிடி எடுப்பதற்கு பதிலாக பிச்சை எடுத்து திரியலாம் என, பஸ் நடத்துநரை தாயும் மகளும் தூற்றி சென்றதை காண முடிந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்