18 மத குருக்கள் நாட்டில் கைதிகளாக உள்ளனர்; 15 பேர் பௌத்த பிக்குகள்

🕔 June 20, 2018

நாட்டில் சிறைக் கைதிகளாக மொத்தம் 18 மத குருக்கள் உள்ளனர் என்று, இலங்கை மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும், சிறைச்சாலை சட்டத்தின் அடைப்படையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த நிலையம் கூறியுள்ளது.

சிறைச்சாலைகளில் கைதிகளாக இருக்கும் மத குருக்களில் 15 பேர் பௌத்த பிக்குகளாவர். ஏனையோர் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத குருக்களாவர்.

இவர்கள் கொலை, பாலியல் வண்புணர்வு, கொள்ளை, கலகம் மற்றும் அரசுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியமை ஆகிய குற்றங்களைப் புரிந்தவர்களாவர்.

சிறைக் கைதியாகவுள்ள இந்து மத குரு – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்வதற்கு முயற்சித்தவராவார்.

மேற்படி 18 மத குருக்களும் சிறைச்சாலை சட்டத்தின்படி நடத்தப்படுவதாகவும், அவர்களுக்கான உணவு, உடை, பார்வையாளர் மற்றும் இலங்கம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் சிறைச்சாலை சட்ட விதிகளுக்கிணங்கவே கையாளப்படுவதாகவும் இலங்கை மனித உரிமைகள் நிலையம் கண்டறிந்துள்ளது.

சிறைக்கு அனுப்பப்படும் மத குருக்கள் விசேடமாகக் கவனிக்கப்பட வேண்டுமாயின், அதற்கான புதிய சட்டங்களை உருவாக்குவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது எனவும், இலங்கை மனித உரிமைகள் நிலையம் தெரிவத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்