சிறைச்சாலை ஆடை: தேரருக்கு காவி, ரகுபதி சர்மாவுக்கு ஜம்பர்; இதுதான் சட்டமா: சிரேஷ்ட ஊடகவியலாளர் கேள்வி

🕔 June 20, 2018

பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர், சிறைச்சாலை ஆடையை அணிய இடமளிக்கக் கூடாதென போர்க்கொடி தூக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று வருடங்களாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பிரம்மஸ்ரீ ரகுபதி சர்மா எனும் இந்து மதகுரு, சிறைச்சாலை ஆடையைத்தான் அணிய வைக்கப்படுவதாக, சிரேஷ்ட ஊடகவியலாளரும், சுடர்ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர். சிவராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவொன்றினை இட்டுள்ள அவர், மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரர், சிறைச்சாலை ஆடையை அணிய இடமளிக்கக் கூடாதென போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகளும் அதற்கேற்பவே செயற்படுகின்றனர்.

மதகுருமார்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டும்தான்.

ஆனால் மூன்று வருடங்களாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பிரம்மஸ்ரீ ரகுபதி சர்மா ஐயா, சிறைச்சாலை ஜம்பர் அணிவிக்கப்பட்டே ‘அழகு’ பார்க்கக்கப்பட்டார். இன்னும் ஜம்பருடன்தான் உள்ளார்.

சிறையில் காடையர்கள் அவரை வேட்டி அணிந்து நீதிமன்றம் செல்வதற்குக் கூட, இடமளிக்காத நிகழ்வுகள் அரங்கேறின.

தண்டனையில் ஏது பெரியது; சிறியது. குற்றத்தில் ஏது பெரியது; சிறியது.

தேரருக்கு ஒரு சட்டம் குருக்களுக்கு ஒரு சட்டம். அதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்