நீதிமன்றில் திருடர்கள் கைவரிசை

🕔 June 17, 2018

திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றால் பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என்று நியாயம் தேடி மக்கள் போவார்கள். ஆனால், நீதிமன்றம் ஒன்றிலேயே திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றமை, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையினுள் திருட்டு இடம்பெற்றுள்ளது.

நீதிமன்ற பாதுகாப்பு அதிகாரியின் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அங்கிருந்த அநேகமான உபகரணங்கள் திருட்டுப் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, நீதிமன்ற அறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 04 கிலோ கிராம் கஞ்சாவை நீதிமன்ற வளாகத்தில் திருடர்கள் விட்டுச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பில், பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Comments