பெண்களுடைய சாட்சியங்களை ஏற்க முடியாது: றிஸ்வி முப்தியின் உரை தொடர்பில் எழுகிறது சர்ச்சை

🕔 June 15, 2018

– புதிது செய்தியாளர் அஹமட் –

ஸ்லாத்தில் பெண்களுடைய சாட்சியங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்த கருத்து, பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளதோடு, அதற்கு எதிராக கண்டனங்களும் வெளியாகியுள்ளன.

நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப் பிறையை பார்ப்பது பற்றியும், நேற்று வியாழக்கிழமை – பிறை பார்த்ததாகக் கூறியவர்களின் சாட்சியம் தொடர்பிலும், இன்று வெள்ளிக்கிழமை குத்பா உரையொன்றினை றிஸ்வி முப்தி வழங்கியிருந்தார்.

இதன்போதே, பெண்களின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, றிஸ்வி முப்தி கூறினார்.

நேற்று வியாழக்கிழமை சில பெண்கள் தலைப் பிறையைக் கண்டதாக சாட்சி கூறியிருந்தனர். இது பற்றி இன்றைய குத்பாவில் பேசும்போதே, பெண்களின் சாட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, றிஸ்வி முப்தி தெரிவித்தார்.

இந்த நிலையில் இஸ்லாத்தில் பெண்களின் சாட்சியங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும், றிஸ்வி முப்தி இவ்வாறு கூறியமையினால், இஸ்லாத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் பலரும் தமது கண்டனங்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

றிஸ்வி முப்தியின் குரல் பதிவு

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்