தாமரை மொட்டில் இணையாத வரையில், 16 பேரையும் ஏற்பதில்லை: பசில் தெரிவிப்பு

🕔 June 14, 2018

ரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெறும் வரை, அவர்களை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேற்படி 16 பேரும் மஹிந்த ராஜபக்ஷ அணியினரைச் சந்திக்கவுள்ளதாக, செய்திகள் வெளியாகி வந்த நிலையிலேய, பசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

தாமரை மொட்டினை சின்னமாகக் பொதுஜன பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Comments