இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை, மீளக் கையளித்தார் காதர் மஸ்தான்

🕔 June 14, 2018

– முன்ஸிப் அஹமட் –

பிரதியமைச்சர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சிலிருந்து இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை தனது விருப்பத்தின் அடிப்படையில் மீளக் கையளித்துள்ளார்.

இந்தச் செய்தியை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்

ஜனாதிபதியை இன்று வியாழக்கிழமை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சில் இருந்து, இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு காதர் மஸ்தான் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த பொறுப்பிணை ஜனாதிபதி மீளப்பெற்றுக் கொண்டார்.

மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், காதர் மஸ்தானுக்கு இந்து சமய விவகார பிரதியமைச்சு வழங்கப்பட்டமைக்கு எதிராக, தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

இதனையடுத்து, குறித்த பிரதியமைச்சுப் பொறுப்பினை காதர் மஸ்தானே, ஜனாதிபதியிடம் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.

இதற்கமைய அவரிடம் இருந்த இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை ஜனாதிபதி மீளப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தொடர்பான செய்திகள்: 

01) காதர் மஸ்தான் அங்கஜன் உள்ளிட்ட 07 பேருக்கு அமைச்சர் பதவி

02) காதர் மஸ்தான் நியமனத்தில் தவறுகள் இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித

Comments

புதிது பேஸ்புக் பக்கம்