17 வயது வரை பாடசாலைகளில் பரீட்சைகள் இல்லை: வருகிறது முன்மொழிவு

🕔 June 14, 2018

ல்வித்துறையில் தீவிர மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு, 17 வயதுக்குக் குறைந்த மாணவர்களுக்கு பாடாசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விதமான பரீட்சைகளையும் இல்லாமல் செய்வதற்கான முன்மொழிவொன்றினை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கொண்டுவரவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சமூகத்தில் ஒரு உரையாடலை மேற்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக, அந்த சபையின் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள கல்வி முறைமையானது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலானது என்றும், அவர்கள் வயது முதிர்ந்த பின்னரும் அதன் விளைவினை உணர்வதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்கள் 17 வயதைத் தாண்டிய பின்னர் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்