காதர் மஸ்தான் நியமனத்தில் தவறுகள் இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித

🕔 June 13, 2018

ந்து சமய விவகார பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளமையில் தவறுகள் இல்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

மேற்படி நியமனம் தொடர்பில் தமிழர்கள் எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையிலேயே, அவர் இந்தக் கருத்தினைக் கூறியுள்ளார்.

முஸ்லிம் கலாசார அமைச்சராக சிங்களவர் ஒருவர் இருக்க முடியும் என்றால், முஸ்லிம் ஒருவர் இன்னுமொரு கலாசார அமைச்சின் அமைச்சராக ஏன் இருக்க முடியாது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்து கலாசார பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் ஊடகவியலாளர் ஒருவர் இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்படி கருத்தை, அமைச்சர் ராஜித கூறினார்.

Comments