காதர் மஸ்தான் அங்கஜன் உள்ளிட்ட 07 பேருக்கு அமைச்சர் பதவி

🕔 June 12, 2018

ரசாங்கத்திலுள்ள 07 பேருக்கு இன்று செவ்வாய்கிழமை பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்களுக்கே இந்தப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இந்த நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.

ராஜாங்க அமைச்சர்கள்

  1. ரஞ்சித் அலுவிகார –     சுற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ சமய அலுவல்கள்      ராஜாங்க அமைச்சர்
  2. லகீ ஜயவர்த்தன  –     மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், சமூக அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

  1. அஜித் மான்னப்பெரும – சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்
  2. அங்கஜன் ராமநாதன் – விவசாயத்துறை பிரதி அமைச்சர்
  3. காதர் மஸ்தான் – மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சர்
  1. எட்வட் குணசேக்கர – உள்நாட்டு அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர்
  2. நலின் பண்டார ஜயமஹ – பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சர்

Comments