அரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து ஜெமீல் ராஜிநாமா

🕔 June 8, 2018

– அஹமட் –

ரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து ஏ.எம். ஜெமீல் ராஜிநாமா செய்துள்ளார் எனத் தெரியவருகிறது.

நேற்று வியாழக்கிழமை அந்தப் பதவியிலிருந்து அவர் ராஜநாமா செய்துள்ளார்.

கட்சி நடவடிக்கைகளில் முழுவமையாக ஈடுபடுவதற்காகவும், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டும், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரான ஜெமீலுக்கு, அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன், தனது அமைச்சின் ஆலாசகர் பதவியொன்றினை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கிழக்கு மாகாண சபையில் இரண்டு தடவை உறுப்பினராகப் பதவி வகித்த ஜெமீல், அந்தக் கட்சியிலிருந்து விலகிய பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments