மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை

🕔 May 30, 2018

மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு, மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள் முடிவடைந்த போதும், அந்த சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் இவ்வருட இறுதியில் நிறைவடைகின்றன.

இன்னும் மூன்று சபைகளின் பதவிக்காலங்கள் அடுத்த வருடம் நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments