அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றோர் யார்; எவ்வளவு பெற்றனர்; அம்பலமாக்குகிறார் கீர்த்தி தென்னகோன்

🕔 May 29, 2018

ர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றவர்களில், இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர் என்று, இலங்கை மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 06 பேரும், ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 17 பேருமாக மொத்தம் 118 பேர் இவ்வாறு பணம் பெற்றுனர் என்று, அந்த நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் கீர்த்தி தென்னகோன் கூறியுள்ளார்.

இவர்களுக்கு 01 மில்லியன் ரூபாய்க்கும் 25 மில்லியன் ரூபாய்க்கும் இடைப்பட்ட தொகைப் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கீர்த்தி தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சில அரசியல்வாதிகள் பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸிடமிருந்து, வேறு நபர்களினூடாக பணத்தினைப் பெற்றுள்ளதாகவும் தென்னகோன் விபரித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை பற்றிய அறிக்கையின் 842ஆவது பக்கத்தில், அலோசியஸிடமிருந்து பணம் பெற்றவர்களின் விபரங்கள் உள்ளன.

இவர்களில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments