எனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாய் வழங்கினார்: தயாசிறி ஜெயசேகர

🕔 May 29, 2018

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், ஐ.தே.கட்சி உட்பட பல கட்சிகளின் பிரசார பணிகளுக்கும் வேறு தேவைகளுக்கும் என 1.3 பில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளார் என்று  முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணிகளுக்காக தனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாவினை வழங்கிய போதும், அவரை பாதுகாக்க ஒருபோதும்  தான் முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தான் பணம் பெற்றது தவறு என்றால், ஏனைய சகல கொடுக்கல் வாங்கல் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments