இன்னொரு மதத்தை நசுக்க நினைத்த போதே, உங்கள் மத கொள்கையிலிருந்து விலகி விட்டீர்கள்; சச்சிதானந்தனுக்கு சுடர் ஒளி பிரதம ஆசிரியர் சாட்டையடி

🕔 May 27, 2018

றுதிப் போரில் குழந்தைகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டமை, பௌத்த மத கோட்பாடுகளுக்கு புறம்பானது என்று தைரியமாக உங்களால் கூற முடியுமா? என்று சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை நோக்கி, சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜா கேள்ளியெழுப்பியுள்ளார்.

மேலும், ‘மதம் என்பது கண்ணியம்; அது வெறி அல்ல’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுடர் ஒளியின் பிரதம ஆசிரியர் சிவராஜா தனது பேஷ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவொன்றிலேயே இவற்றினைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவின் முழுமையான வடிவம் வருமாறு;

“இலங்கையானது இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என, சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளாராம்.

“இந்த மண் புனிதமான மண். பசுக்களைப் பேணுவதால் அது புனிதமானது. எமது புனிதமான மண்ணைக் கெடுக்காதீர்கள். எப்படி ஒரு ஆணை, பெண்ணை, குழந்தையை கொல்வது கொடுமையோ அவ்வாறே பசுவைக் கொல்வதும் கொடுமையானது” என்றும் அவர் கூறியுள்ளாராம்.

அவரிடம் சில கேள்விகள்;

1. முள்ளிவாய்க்காலில் நடந்தது கொடுமையா இல்லையா? அதை செய்தவர்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

2. இறுதிப் போரில் குழந்தைகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டமை பௌத்த மத கோட்பாடுகளுக்கு புறம்பானது என்று தைரியமாக சொல்ல முடியுமா உங்களால் ?

3. இறந்த புலிகளின் கல்லறைகள் – புல்டோசர்கள் கொண்டு அழிக்கப்பட்டனவே… இந்து, பௌத்த மதங்கள் இதனை அங்கீகரிக்கின்றனவா?

4. இந்து கோயில்கள் அழிக்கப்பட்ட போது நீங்கள் என்ன செய்தீர்கள்? எடுத்த நடவடிக்கைகள் என்ன?

மதம் என்பது கண்ணியம்; அது வெறி அல்ல.

இன்னொரு இனத்தை – மதத்தை நசுக்க வேண்டுமென நீங்கள் நினைக்கும்போதே இந்து , பௌத்த மதங்களின் கோட்பாடுகளில் இருந்து விலகிச் செல்கிறீர்கள்.

தொடர்பான செய்திகள்:

01)  மாடுகளைக் கொல்வதாக இருந்தால், நாட்டை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: சிவசேனை தலைவர் சச்சிதானந்தன்

02) முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் கக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் யார்? பின்னணி என்ன?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்