பாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

🕔 May 24, 2018

பாட்டியொருவர் தனது பக்கத்து தோட்டத்தில் 19 மாங்காய்களைத் திருடியதாகக் கூறப்படும் வழக்கினை, ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு அனுராதபுரம் பிரதம நீதிவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான ஹர்ஷ கெகுனாவல ஒத்தி வைத்தார்.

மேற்படி வழக்கு மேற்று புதன்கிழமை நீதிவான் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது, இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்த மேற்படி மூதாட்டி, தான் குற்றமற்றவர் என நீதிமன்றுக்குத் தெரிவித்தார்.

இதனையடுத்து ஒக்டோபர் 02ஆம் திகதியன்று, மேற்படி மூதாட்டியை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Comments