நவவி எம்.பி. ராஜிநாமா; வெற்றிடமான பதவிக்கு இஸ்மாயில் நியமிக்கப்படலாம்

🕔 May 23, 2018

– அஹமட் –

கில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி – தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று புதன்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

தேர்தல் ஒப்பந்தத்துக்கு இணங்க, இந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அ.இ.ம.காங்கிரசுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியிருந்தது.

இந்த நிலையில், நவவி ராஜிநாமா செய்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு, சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் மிக அதிகமுள்ளதாக, நம்பமான தரப்பொன்றிலிருந்து தெரியவருகிறது.

முன்னாள் உபவேந்தர் இஸ்மாயிலுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக, மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன், ஏற்கனவே ஒரு வாக்குறுதி வழங்கியுள்ளமையினால், அதனை அவர் நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாகவும் மேற்படி தரப்பு கூறுகிறது.

மேலும், இம்முறை அ.இ.ம.காங்கிசுக்கு சம்மாந்துறை பிரதேச மக்கள் வாக்களித்து, அப் பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்கான பலத்தை வழங்கியமையினையும் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் கவனத்திற் கொண்டுள்ளமையினால், அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்மாயிலுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்