ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், லஞ்சம் பெற்ற போது கைது

🕔 May 23, 2018

ழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் – மாவத்தகம ஊழல் ஒழிப்பு பிரிவில் சேவை புரிந்து வரும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

மதுபான மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் பொருட்டு, 15 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்ற வேளையே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Comments