தென்கிழக்கு பல்கலைக்கழகம்; கலாநிதி குணபாலன் பீடாதிபதியாகத் தெரிவு

🕔 May 22, 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியாக கலாநிதி எஸ். குணபாலன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப்பீடத்தில் பணியாற்றும் ஒரேயொரு தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் ஆரம்பகால விரிவுரையாளராக இருந்து, தன்னை அர்ப்பணித்துக் கடமை புரிந்துவரும் கலாநிதி குணபாலன்,  இப்பீடத்தின் பீடாதிபதியாக கடந்த மூன்று வருட காலமாகக் கடமையாற்றி வந்தார்.

இந்த நிலையில், பீடாதிபதி பதவிக்காக இம்முறை இவரோடு போட்டியிட்ட ஏனைய இரண்டு வேட்பாளர்களும் முறையே 08, 05 வாக்குகளைப் பெற்றனர். இந்த நிலையில், இவர் 19 வாக்குகளைப் பெற்று பெருவெற்றியடைந்துள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்துக்கு இவர் ஆற்றிய அர்ப்பணிப்புக்களின் பிரதி பலிப்பாகவும், இவர்மீது பீடசபை உறுப்பினர்கள் வைத்துள்ள அதீத நம்பிக்கையுமே, இவரின் இந்த வெற்றிக்கு பிரதான காரணமாகப் பார்க்கப்படுகிறன.

சக ஊழியர்களுடனும் மாணவர்களுடனும் சகோதரத்துவம் மற்றும் அன்புடன் பழகி, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இப்பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிவரும் கலாநிதி எஸ். குணபாலன், முகாமைத்துவத்தில் முதல்தர முதுநிலை விரிவுரையாளராவார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் தனது முகாமைத்துவ இளமானிக் கற்கையினை நிறைவு செய்தார். பின்னர், களனி பல்கலைக் கழகத்தில் வர்த்தக முதுமானிக் கற்கையை மேற்கொண்டு இந்தியாவில் தனது கலாநிதிப் பட்டத்தைபெற்றுக் கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்