அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது சிறந்தது: அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

🕔 May 21, 2018

 ரசாங்கத்தினுள் இருந்துகொண்டு அதனை விமர்சிக்கின்றவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை விட வெளியேறுவது சிறந்தது என்று, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்தார்.

மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எத்தகைய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டாலும், அரசாங்கத்தை தனித்து கொண்டு செல்லும் பலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கிறது.

ஆனால், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியினருக்கு தற்போது அவ்வாறான மனோ நிலை இல்லை” என்றார்.

Comments