ஐ.தே.கட்சி மறுசீரமைப்பானது பலனற்றதொரு செயற்பாடாகும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ

🕔 May 18, 2018

க்கிய தேசியக் கட்சியில் இடம்பெற்ற மறுசீரமைப்பானது பலனற்றதொரு செயற்பாடாகும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் உள்ள சிறுவர்கள் இல்லமொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, இதனைக் கூறினார்.

அண்மையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

ஆயினும், அந்தக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டுமென பரவலாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், அது நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments