பலஸ்தீன விவகாரத்தில் இலங்கையின் மௌனம் குறித்து, நாாடாளுமன்ற உறுப்பினர் நாமல் விசனம்

🕔 May 16, 2018

ரோப்பாவில் இடம்பெறும் சிறு சம்பவங்களுக்கெல்லாம் கண்டணம் தெரிவிக்கும் இலங்கை அரசாங்கம், பலஸ்தீன விவகாரத்தில் இதுவரை எந்த கண்டத்தையும் வெளியிடாமை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பலஸ்தீன் – இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா பக்கச் சார்பாக நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“அமெரிக்காவின் தலையீடு எங்கொல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் பிரச்சினைகள் குறைத்த வரலாறு இல்லை. மாறாக பிரச்சினைகள் அதிகரித்த வரலாறுகளே உள்ளன.

இஸ்ரேல் – பலஸ்தீன் விவகாரத்தில் அமெரிக்காவின் செயற்பாடு, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்துள்ளது.

இஸ்ரேல் தலைநகர் ஜெரூசலம் என அமெரிக்கா கடந்த வருடம் அறிவித்ததோடு இஸ்ரேலின் டெல் அலிவ் நகரில் இருந்த தமது தூதரகத்தை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெரூசலத்தில் திறந்துவைத்தது.

அமெரிக்காவின் இந்த செயற்பாடு பலஸ்தீனர்கள் மற்றும் அவர்களின் நேசநாடுகளுக்கு கடும் கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்பட்டுத்தியுள்ளது. அதேவேளை, பலஸ்தீனில் மோதல்களை மேலும் அதிகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு – பலஸ்தீனர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ள போதும், உலக நாடுகள் இது தொடர்பில் மவுனமாகவே உள்ளன.

கடந்த சில தினங்களாக காஸாவில் பாரிய மோதல் வெடித்துள்ள நிலையில், பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் இடம்பெறும் சிறு சம்பவங்களுக்கெல்லாம் கண்டணம் தெரிவிக்கும் இலங்கை அரசாங்கம் பலஸ்தீன விவகாரத்தில் இதுவரை எந்த கண்டத்தையும் வெளியிடவில்லை.

இந்த அரசாங்கள் – அமெரிக்கா போடும் தாளத்திற்கு ஆடும் பொம்யாக செயற்படும் அதேவேளை நியாயத்தின் பக்கம் நிற்காமல் செயற்பட்டு வருகிறது.

மேலும் பலஸ்தீன் நாடு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை அங்குள்ள வீதிக்கு இட்டு, அவரை கௌரவித்துள்ளது” என்றார்.

Comments